ஆப்நகரம்

ஐடி ரெய்டில் அரசியலா; காமெடி பண்ணாதீங்கபா; நன்றாக சமாளித்த கிருஷ்ணபிரியா!

ஐடி ரெய்டு நடைபெற்றது இயல்பான நிகழ்வு தான் என்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.

TNN 15 Nov 2017, 3:29 pm
சென்னை: ஐடி ரெய்டு நடைபெற்றது இயல்பான நிகழ்வு தான் என்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil it raid is the usual one says krishnapriya
ஐடி ரெய்டில் அரசியலா; காமெடி பண்ணாதீங்கபா; நன்றாக சமாளித்த கிருஷ்ணபிரியா!


இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு, சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து பிரம்மாண்ட ஐடி ரெய்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

1800 அதிகாரிகளைக் கொண்டு, 170க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தொடங்கிய சோதனை, 5 நாட்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளது.

இதில் அதிகம் விசாரிக்கப்பட்டது சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் மற்றும் மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகீலா ஆகிய மூன்று பேராகும்.

ஐடி ரெய்டு முடிவு பெற்ற பின், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணபிரியா, வருமான வரி சோதனை வழக்கமான ஒன்று தான் என்றும், இதில் அரசியல் இருப்பதாக கருதவில்லை என்றும் கூறினார்.

மேலும் ஆவணங்கள் எதுவும் வீட்டில் இருந்து எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

IT Raid is the usual one says Krishnapriya.

அடுத்த செய்தி