ஆப்நகரம்

தமிழகத்தை உலுக்கிய ஐடி ரெய்டு; வசமாக சிக்கிய கல்வி நிறுவனம்?

இன்று பிற்பகல் முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

Samayam Tamil 28 Oct 2020, 3:18 pm
தமிழகத்தின் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களின் 22 இடங்களில் இன்று (28-10-2020) வருமான வரி சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கல்வி நிறுவனமும் அடங்கும். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil IT Raid


இதேபோல் திமுக கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்கிற கிருஷ்ணனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா விடுதலை: காகிதம் கர்நாடகாவில், கையெழுத்து டெல்லியில்!

இவரது வீட்டில் நண்பகல் 12 மணியளவில் அதிகாரிகள் சென்றனர். இதுபற்றி தகவலறிந்து பையா கவுண்டர் ஈரோட்டில் இருந்து கோவைக்கு விரைந்து வந்தார். சட்டவிரோத சேர்க்கப்பட்ட பணம் அல்லது ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என்று தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி