ஆப்நகரம்

கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை!!

கல்கி பகவான் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Samayam Tamil 16 Oct 2019, 3:45 pm
கல்கி பகவான் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Samayam Tamil Kalki


தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சீடர்களைக் கொண்டு இருக்கும் கல்கி பகவான் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இவர்களுக்கு சொந்தமான உணவகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வருமான வரி ஏய்ப்பு செய்து இருப்பதையடுத்து இவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் கோவர்த்தனபுரத்தில் இருக்கும் அவர்களது தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதுதான் கல்கி பகவான் ஆஸ்ரமங்களுக்கான தலைமையிடமாக உள்ளது. இவரது மகன் தொழிலதிபராக இருந்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்!!

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இவர்களுக்கு சொந்தமான உணவகங்களில் கணக்குகளை முறையாக இவர்கள் மேற்கொள்ளவில்லை. சென்னையில் மட்டும் இவர்களுக்கு ஏழு கிளைகள் உள்ளன. தமிழகத்தில் மதுரை, ஆம்பூர் மற்றும் பெங்களூரில் இவர்களுக்கு கிளைகள் உள்ளன.

ராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் சம்மந்தமில்லை: விடுதலைப் புலிகள் அறிக்கை!

தோகாவில் உள்ள கத்தாரில் இவர்களுக்கு இரண்டு உணவகங்கள் உள்ளன். வருமான வரி ஏய்ப்பு செய்ததால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிந்த பின்னர்தான் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது தெரிய வரும்'' என்றனர்.

பேனர் விவகாரத்தில் அரசுக்கு சாதகமான தீர்ப்பா.? உச்ச நீதிமன்றம் செல்லும் டிராபிக் ராமசாமி...

2010ஆம் ஆண்டிலும் வருமான வரி பாக்கி வைத்திருந்த இவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி