ஆப்நகரம்

ஆர்.கே.நகரில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம்: ஆதாரங்கள் பறிமுதல்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

TNN 7 Apr 2017, 9:44 am
சென்னை: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil it seize documents confirming currency distribution in rk nagar
ஆர்.கே.நகரில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம்: ஆதாரங்கள் பறிமுதல்


சென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீட்டிலும் வருமானவரி சோதனை நடத்தி வருகிறது.

சென்னை ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இன்று காலை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமானவரித்துறை சோதனையைத் தொடங்கியது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடத்திருப்பது தொடர்பாகவே சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, துணை ராணுவப்படையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீட்டிலும் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறை சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான கணக்கு வழக்குகள் எழுதப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன.

அடுத்த செய்தி