ஆப்நகரம்

கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள்; 14 கார்களில் நைசா எஸ்கேப்; சம்மன் அனுப்பிய ஐடி!

சசிகலா குடும்பத்தினர் இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் ஐடி ரெய்டில், சில முக்கிய ஆவணங்கள் எஸ்கேப் ஆனதாக கூறப்படுகிறது.

TNN 12 Nov 2017, 5:03 pm
சென்னை: சசிகலா குடும்பத்தினர் இல்லங்களில் நடத்தப்பட்டு வரும் ஐடி ரெய்டில், சில முக்கிய ஆவணங்கள் எஸ்கேப் ஆனதாக கூறப்படுகிறது.
Samayam Tamil it summons to sasikala relativies after the raid
கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள்; 14 கார்களில் நைசா எஸ்கேப்; சம்மன் அனுப்பிய ஐடி!


இந்திய அளவில் பிரம்மாண்ட ஐடி ரெய்டு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. 1800 அதிகாரிகளுடன், 100க்கும் மேற்பட்ட இடங்களில் 4வது நாளாக சோதனை தொடர்கிறது. இதில் குறிவைக்கப்பட்டது சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பத்தார்.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் பினாமிகளையும் கண்டறிந்து, வளைத்துப் பிடித்து சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களும், தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 14 கார்களில், பினாமி சொத்துக்களின் ஆவணங்களை எஸ்கேப் ஆக்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இது பல நூறு கோடி மதிப்பிலானவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை எப்படியோ வருமான வரித்துறையினர் கண்டறிந்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா குடும்பத்தில் உள்ள பலருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. உடனடியாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

IT summons to Sasikala relativies after the raid.

அடுத்த செய்தி