ஆப்நகரம்

ஜெ.நினைவிடம் திறப்பு - மெரினாவில் குவிந்த அதிமுகவினர்: கொரோனா பரவாதா?

ஜெயலலிதா நினைவு மண்டப திறப்பு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர்.

Samayam Tamil 27 Jan 2021, 11:18 am
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 50,422 சதுர அடியில், 80 கோடி ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. நினைவு மண்டபத்தை இன்று காலை 11 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Samayam Tamil j jayalalitha memorial opening thousands of aiadmk cadres in marina corona risk
ஜெ.நினைவிடம் திறப்பு - மெரினாவில் குவிந்த அதிமுகவினர்: கொரோனா பரவாதா?


ஏன் பிரதமர் வரவில்லை?

முன்னதாக திறப்பு விழாவை பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கவும், பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து திறக்கவும் திட்டமிட்டதாக தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமி நேரில் அழைப்பு விடுத்தும் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டவரின் நினைவிடத்தை திறந்துவைத்தால் விமர்சனங்கள் எழும் என்பதால் பிரதமர் மறுத்துவிட்டதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

சசிகலா விடுதலையும் திறப்பு விழாவும் ஒரே நாளில்!

சசிகலா விடுதலையும் இன்றைய தினம் என்பதால் அவரது விடுதலை குறித்த கவனத்தை குறைப்பதற்காக அதே நாளில் திறப்பு விழா நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்து இன்று அவரை சென்னைக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்றுவருகிறார். பிப்ரவரி 3ஆம் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்கரை பகுதியில் மையம் கொண்ட அதிமுகவினர்!

விடுதலையானார் சசிகலா: 3ஆம் தேதி சென்னை திரும்ப திட்டம்!

கார்கள், வேன்கள், பேருந்துகள் என ஆயிரக்கணக்கான அதிமுகவினர் அதிகாலை முதலே சென்னைக்குள் படையெடுத்து வருகின்றனர். சென்னை கடற்கரை சாலை, வாலஜா சாலை என பல இடங்களிலும் அதிமுகவினர் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்காக நடமாடும் அம்மா உணவகங்களும், நடமாடும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்தம்பித்த சென்னை!

இதனால் சென்னை முழுக்கவே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நினைவிட திறப்பு விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமல் கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றிவருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரொனா பரவும் அபாயம்!

சசிகலா பக்கம் அணி வகுக்கும் அமைச்சர்கள்: எடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம்!

கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துவரும் நிலையில் அதிமுகவினரை மட்டும் பல்லாயிரக்கணக்கில் குவிய அனுமதிக்கலாமா என கேள்விகள் எழுந்துவருகின்றன. முதல்வரே அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக வாருங்கள் என அழைப்பு விடுத்தார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவினரின் உயிருடன் விளையாடியபடியே அரசியல் செய்வதாக ஆளுங்கட்சி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி