ஆப்நகரம்

கொரோனா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை குற்றம்சாட்டுவதா? - ஜக்கி வாசுதேவ் காட்டம்

கொரோனா வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட ஒரு மதத்தை யாரும் குற்றம்சாட்டக்கூடாது. கொரோனா வைரஸுக்கு ஜாதி, மதம் எல்லாம் தெரியாது என்பதை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 3 Apr 2020, 9:18 pm
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,000 ஆயிரத்தை தாண்டிவிட்டது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 400 ஐ கடந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil jaggi


இப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிரடியாக உயர்ந்துள்ளதற்கு, டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தப்லீத் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தான் முக்கிய காரணம் என்ற கருத்து நாடு முழுவதும் பரவலாக பரவி வருகிறது.

இந்த மாநாட்டை மையமாக வைத்து, ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தப்லீத் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கேலி, கிண்டல் செய்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ஆர்வக் கோளாறில் ஏப்ரல் 5ஆம் தேதி இதை செய்து விடாதீர்கள்!!

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் தமது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு இன்று பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. ஜாதி, மதத்தின் பெயரில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான நேரம் இதுவல்ல.

மாறாக, கொரோனா வைரஸ் தொற்று எனும் கொடிய நோய் இந்தியாவில் பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்ப்படுத்தாமல் இருப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்கும் முக்கியமான தருணம் இது.

TN Coronavirus Cases: “தமிழ்நாட்டில் 309 பேர் கண்டறியப்பட்டனர், ஜமாத் கொடுத்த தகவல் உதவியாக இருந்தது” பீலா

இந்த நெருக்கடியான தருணத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆக்கப்பூர்வமான வழியில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை.

மாறாக, கொரோனா வைரஸை மையமாக வைத்து குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. பிரச்சினைக்கு முடிந்தால் நாம் தீர்வு சொல்ல வேண்டும். இல்லையென்றால், சமூக வலைதளங்களில் நாம் பேசாமல் இருப்பதே சிறந்தது.

ஏனென்றால், கொரோனா வைரஸுக்கு ஜாதி, மதம் எல்லாம் தெரியாது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தை நாம் யாரும் குற்றம்சாட்டக்கூடாது என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தமது வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி