ஆப்நகரம்

Alanganallur Jallikattu 2019: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்!

அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்கும் வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. மாடுபிடி வீரர்கள் முழு உடல் பகுதியுடன் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2019, 10:49 am

ஹைலைட்ஸ்:

  • மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியில்பங்கேற்கும் மாடுபிடிக்கும் வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்
  • வீரர்கள் முழு உடல் பகுதியுடன் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Jallikattu 2019: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்!
Jallikattu 2019: மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம்!
அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்கும் வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் வரும் 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக மேடை, வாடிவாசல், இரண்டு அடுக்கு தடுப்பு வேலி, பார்வையாளர் கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்கி, நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள் முழு உடல் பகுதியுடன் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் 800 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்கள், புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களை சமர்ப்பிப்பதுடன், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் வீரர்களுக்கான பதிவு எண் கொண்ட அனுமதி ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது

இந்த ஒப்புகை சீட்டுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாள் அன்று வரும் மாடுபிடி வீரர்களுக்கு சீருடை அளித்த பின்பே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி