ஆப்நகரம்

தென் மாவட்டங்களில் களைகட்டும் ஜல்லிக்கட்டு!

மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

Samayam Tamil 17 Jan 2020, 10:40 am
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது இந்த வீர விளையாட்டுக்கு தடை கேட்டவர்கள், அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் ஆயிரத்துக்கும் குறைவாக மிக சொற்ப அளவில் இருக்கும் காளை மாடுகளுக்காக தேவையில்லாமல் போராடுகிறார்கள் என்று ஒரு விமர்சனத்தை வைத்தார்கள்.
Samayam Tamil தென் மாவட்டங்களில் களைகட்டும் ஜல்லிக்கட்டு


ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள காளைகளின் எண்ணிக்கையை அளவிட்டாலே அது எவ்வளவு பெரிய பொய் எனத் தெரியும்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. ஆனால் இவை மட்டுமல்லாமல் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் எனப் பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

அமர்க்களமாய் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 921 மாடு பிடிவீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் திருச்சி மணப்பாறை அருகே ஆவாரங்காடு சங்கர் திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதில் 700 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கோலகலமாகத் தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 750 காளைகளூம் 270 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் சோகம்: நீளும் காயமடைந்தோர் பட்டியல்!

கரூர் குளித்தலை அருகே ராச்சாண்டர் திருமலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 850 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். அதே போல் திண்டுக்கல் அருகேயும் ஜல்லிக்க்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.

அடுத்த செய்தி