ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்:எங்கு?என்ன நடக்கிறது?

ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை வெளியேற்றும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

TNN 23 Jan 2017, 9:21 am
ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை வெளியேற்றும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
Samayam Tamil jallikattu protesters evacuated by police all over tamilnadu
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வெளியேற்றம்:எங்கு?என்ன நடக்கிறது?


சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று காலை ஆறு மணி அளவில் போரட்டக்காரர்களை காவல்துறை வெளியேற்றத் துவங்கியது.பாதி பேர் வெளியேற்றப்பட்ட நிலையில்,மீதமுள்ளவர்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியதால் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கோவை வ உ சி மைதானத்தில் போரட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.இதில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

திருச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினரின் அறிவிப்பையடுத்து ,அவர்களாகவே போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு,காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.மதுரை செல்லூர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட ரயிலை விடுவிக்க,போராட்டக்காரர்கள் மறுத்து விடுகின்றனர்.

மதுரை அலங்காநல்லூர் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.போராட்டத்தை கைவிட மறுக்கும் அலங்காநல்லூர் மக்கள்,மனிதச் சங்கிலி அமைத்துள்ளனர்.அருகில் உள்ள கிராம மக்களும் அங்கு கூடி வருகின்றனர்.

வேலூர் மற்றும் சேலத்தில் போரட்டக்காரர்கள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக வெளியேற்றியுள்ளனர்.

இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் போரட்டக்காரர்களை வெளியேற்ற கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Jallikattu Protesters evacuated by police all over Tamilnadu

அடுத்த செய்தி