ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு வன்முறை - போலீசார் மீது நடவடிக்கை கோரி கையெழுத்து இயக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையின் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

TNN 31 Jan 2017, 11:04 am
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையின் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil jallikattu violence signature campaign to demand action against police
ஜல்லிக்கட்டு வன்முறை - போலீசார் மீது நடவடிக்கை கோரி கையெழுத்து இயக்கம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சென்னை மெரினா கடற்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். ஒருவாரமாக நடைபெற்று வரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல், மெரினா போராட்டத்தின் இறுதியில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை பூவிருந்தவல்லி மற்றும் தஞ்சையில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி