ஆப்நகரம்

மெரீனாவில் நாளை ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா- ஜரூரான ஏற்பாடு

மெரீனா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ள உள்ளார்கள்.

Samayam Tamil 6 May 2018, 8:26 pm
மெரீனா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ள உள்ளார்கள்.
Samayam Tamil jayalaitha-memorail-hall
மெரீனாவில் நாளை ஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா- ஜரூரான ஏற்பாடு


ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ. 50 கோடியே 80 லட்சம் செலவில் பல்வேறு வேலைபாடுகளுடன் கூடிய நினைவு மண்டபத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி பல்வேறு கலைநயங்கள் கொண்ட விதத்தில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் தமிழக அமைச்சர் பெருமக்கள், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

நாளை காலை 6.30 மணிக்கு யாகபூஜையுடன் விழா ஆரம்பமாகிறது. இதில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் செய்துள்ளார். அவருடன் செய்தித்துறை செயலாளர் ரா. வெங்கடேசன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாலர் எஸ்.கே. பிரபாகார் ஆகியோரும் ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

நாளை மெரினா கடற்கரையில் நடைபெறும் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை காண, அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் பொதுமக்களும் திரளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் தற்போதே ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி