ஆப்நகரம்

ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது.

Samayam Tamil 12 Feb 2018, 1:31 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டது.
Samayam Tamil jayalalitha photo opened in tn assembly
ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டது


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் பன்னீா் செல்வம் முன்னிலையில் சபாநாயகா் தனபால் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தாா்.

முதல் பெண்
தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வா் அண்ணா, ராஜாஜி, எம்.ஜி.ஆா். மற்றும் காந்தியடிகள் உள்பட 10 பேரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜெயலலிதாவின் புகைப்படம் தான் முதல் பெண் படமாக சட்ட சபையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


வி.ஐ.பி.க்கள் இல்லை
இதற்கு முன்னா் நடைபெற்ற ஒவ்வொரு படத்திறப்பு விழாவின் போதும் குடியரசுத் தலைவா், ஆளுநா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் தான் விழா நடைபெறும். ஆனால் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டுமே குடியரசு தலைவா், ஆளுநா் உள்ளிட்டோா் பங்கேற்காமல் நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு பிரதமா் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவரால் பங்கேற்க முடியவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் வரவேற்பு
முதல்வா் பழனிசாமியின் நடவடிக்கைகளை தொடா்ந்து குறைகூறிவருபவா் ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் தினகரன். தற்போது முதல்வா் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு அவா் வரவேற்பு தொிவித்துள்ளா்ா.

இதே போன்று பா.ஜ.க. தமிழக தலைவா் தமிழிசையும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினா் விஜயதாரணியும் விழாவிற்கு வரவேற்பு தொிவித்துள்ளனா்.

படத்தின் அளவு
ஜெயலலிதாவின் உருவப்படம் கையால் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. படம் 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி