ஆப்நகரம்

மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

TNN 19 Dec 2016, 3:10 pm
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil jayalalitha statue in marina
மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா சிலை


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று (திங்கட்கிழமை) அவரது உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் முத்துக்குமார் சார்பில் இந்தச் சிலையை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இந்தச் சிலை ஆந்திராவில் பைபர் மூலம் செய்யப்பட்டது. மெரினா நினைவிடத்தில் ஜெயலலிதா உருவப்படத்தின் அருகிலேயே இச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பார்ப்பதற்காகவும் மக்கள் வருகை அதிகரித்து வருகிறது.

அடுத்த செய்தி