ஆப்நகரம்

ஜெ., மருத்துவமனைக்கு மயக்கத்துடனே அழைத்து வரப்பட்டார் : மருத்துவர்கள்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது லேசான மயக்கத்துடனேயே வாந்தார் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

TNN 6 Feb 2017, 5:11 pm
சென்னை : உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது லேசான மயக்கத்துடனேயே வாந்தார் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
Samayam Tamil jayalalitha was brought unconscious to the hospital doctors
ஜெ., மருத்துவமனைக்கு மயக்கத்துடனே அழைத்து வரப்பட்டார் : மருத்துவர்கள்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக்குறைவாய் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து,ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.இந்த செய்தியாளர் சந்திப்பில் லண்டன் மருத்துவர் ரிச்சார் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அப்பல்லோ மருத்துவர்கள் கூறும் போது, " ஜெயலலிதா மருத்துவமனைக்கு லேசான மயக்கத்துடன் தான் அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் ஒரு வாரத்தில் எழுந்து பேசி , உணவு உட்கொண்டார்.

தேர்தல் தொடர்பான ஆவணத்தை ஜெயலல்லிதா படித்துபார்த்து 22-ம் தேதி அவர் கைரேகை தனது கைரேகையை பதிவு செய்தார். அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். துவக்கத்தில் அவர் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சோதனையில் தான் மற்ற பிரச்சினைகள் தெரிய வந்தது. " என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி