ஆப்நகரம்

சசிகலாவால்தான் ஜெயலலிதா ஏ1 ஆனாரா?

சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என குறிப்பிடவில்லை என வழக்கறிஞர் ஜோதி பேசியுள்ளார்.

Samayam Tamil 7 Dec 2020, 1:01 pm
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி பேசிய பேச்சின் தொடர்ச்சியாக திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil sasikala


அன்றைய தினம் பேசிய அவர், "2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார்" என விமர்சித்துப் பேசினார்.

2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். "2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன்” என சவால் விடுத்தார். மேலும் அவர் ஜெயலலிதா செய்த ஊழல்களை பட்டியலிட்டார். ஜெயலலிதா குறித்து நீதிமன்றமே விமர்சித்ததாகவும் கூறினார்.

ரஜினிகாந்த் பெங்களூர் பறக்க இது தான் காரணம்: வெளியான முக்கிய தகவல்!

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ தான் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என காட்டமாக பேசினார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா குற்றமற்றவர் என விடுதலையான பிறகு உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனார். அவர் இறந்து எண்பது நாள்களுக்குப் பிறகு அப்பீல் போய் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பில் எங்கேயும் ஜெயலலிதா கொள்ளைக்காரி என கூறப்படவே இல்லை. இதுபற்றி நான் விவாதத்துக்கு தயாராக இருக்கிறேன். அண்ணா அறிவாலயத்துக்கு வேண்டுமானாலும் தனியாளாக வருகிறேன். எனக்கு பயமில்லை.

சசிகலா விடுதலையில் இதுதான் சிக்கல்: வெளியான தகவல்!

ஜெயலலிதா இறந்த உடனே அவரது இறப்பு சான்றிதழுடன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தால் வழக்கிலிருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டிருப்பார். ஏ1 என்று ஜெயலலிதா பெயர் வந்திருக்காது. ஆனால் வழக்கை நடத்திய சசிகலா தரப்பு அதை செய்யவில்லை. அந்த சமயம் சசிகலா முதல்வராக வேண்டிய வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அதனால் அதை அவர்கள் செய்யவில்லை” என்று வழக்கறிஞர் ஜோதி பேசினார்.

அடுத்த செய்தி