ஆப்நகரம்

ஜெ., மருத்துவமனையில் அனுமதி; அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை ஒட்டி, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

TNN 23 Sep 2016, 4:21 pm
முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை ஒட்டி, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Samayam Tamil jayalalithaa hospitalisation traffic snarls on chennai roads may worsen on friday evening police warn
ஜெ., மருத்துவமனையில் அனுமதி; அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்


நேற்றிரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு, போக்குவரத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இதன்படி, அண்ணா சாலை மற்றும் காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை போன்ற வழிகளில் போக்குவரத்து போலீசார் திடீர் திருத்தங்களை செய்தனர். கிரீம்ஸ் சாலை வழியே பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், அன்றாடம் அலுவலகம் செல்வோர், மாணவர்கள் என பல தரப்பினரும், குழப்பத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து மாற்றங்கள் காரணமாக, வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

அடுத்த செய்தி