ஆப்நகரம்

புதிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம்: 10 முன்னாள் அமைச்சர்கள் அதிரடி நீக்கம்

அதிமுகவின் புதிய நிர்வாகிகள் மற்றும் நீக்கப்பட்ட அமைச்சர்கள் குறித்த பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

TNN 8 Jun 2016, 12:31 pm
சென்னை: அதிமுகவின் புதிய நிர்வாகிகள் மற்றும் நீக்கப்பட்ட அமைச்சர்கள் குறித்த பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil jayalalithaa restructures aiadmk removes 10 former ministers from key party posts
புதிய நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம்: 10 முன்னாள் அமைச்சர்கள் அதிரடி நீக்கம்


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 38 அதிமுக நிர்வாகிகளை மாற்றி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் மூத்த தலைவர் மதுசூதனன் அவைத்தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பி.பழனியப்பன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், பி.மோகன், எஸ்.கோகுல இந்திரா மய்ரும் ஜெனிஃபர் சந்திரன் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நத்தம் விஸ்வநாதன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக திண்டுகக்ள மாவட்டச் செயலாளராக மேயர் வி.மருதராஜ் நியமிக்கபப்ட்டுள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முக்கூர் என்.சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, தூசி கே.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தோற்கடித்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ ஆர்.குமரகுரு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக கலைராஜனும், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளராக பாலகங்காவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திடமிருந்த ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி, தற்போது சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணனிடம் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டச் செயலாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் தளவாய்சுந்திரத்திற்கு பதிலாக மாநிலங்களவை எம்.பி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டச் செயலாளர் பொறுப்பு தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் பி. ரவீந்திரநாத்குமார் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கட்சியின் ஒழுங்கு மற்றும் மனு குழுக்களை திருத்தி, 234 தொகுதிகளில் உள்ள செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்களை நீக்கியுள்ளார்.

அடுத்த செய்தி