ஆப்நகரம்

அப்பல்லோவில் சிறப்பு அறைக்கு இன்று ஜெயலலிதா மாற்றம்?

முதமைச்சர் ஜெயலலிதா இன்று வீடு திரும்பலாம் என்று செய்தி வெளியாகி இருந்த நிலையில், அவர் இன்று மாலை சிறப்பு அறைக்கு மாற்றப்படலாம் என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

TOI Contributor 19 Nov 2016, 6:08 pm
முதமைச்சர் ஜெயலலிதா இன்று வீடு திரும்பலாம் என்று செய்தி வெளியாகி இருந்த நிலையில், அவர் இன்று மாலை சிறப்பு அறைக்கு மாற்றப்படலாம் என்று அப்பல்லோ மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
Samayam Tamil jayalalithaa to be shifted to a special room at apollo hospitals
அப்பல்லோவில் சிறப்பு அறைக்கு இன்று ஜெயலலிதா மாற்றம்?


இந்த அறையில் செயற்கை சுவாச வசதி, அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பொருத்தப்பட்டு இருக்கும் டிரக்கியோஸ்டோமி அப்படியே இருக்கும் என்றும், அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட 68 வயதான முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். முதலில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு என்று கூறப்பட்டது. பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியானது. தொடர்ந்து நுரையீரலில் தொற்று இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை சீராக்க கழுத்தில் டிரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே ஆகியோர் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவர் விரைவில் குணமடைந்து வருவதாகக் கூறப்பட்டது. தற்போது, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் இருவர் முதலமைச்சருக்கு பிசியோதெரபி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்திருந்த அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, ''முதலமைச்சர் விரும்பும்போது வீட்டுக்கு செல்லலாம். மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்க அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நன்றாக இருக்கிறார். அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. எங்களுடன் உரையாடினார்'' என்று தெரிவித்து இருந்தார்.

அடுத்த செய்தி