ஆப்நகரம்

டிச.5ல் தான் ஜெயலலிதா உயிாிழந்தாா் – மருத்துவமனை விளக்கம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்த தேதி தொடா்பாக முரண்பட்ட கருத்து வெளியான நிலையில் டிச.5ம் தேதி தான் ஜெயலலிதா உயிாிழந்தாா் என்று அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 17 Jan 2018, 10:20 pm
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்த தேதி தொடா்பாக முரண்பட்ட கருத்து வெளியான நிலையில் டிச.5ம் தேதி தான் ஜெயலலிதா உயிாிழந்தாா் என்று அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil jayalalithaa was died on dec 5 apollo report
டிச.5ல் தான் ஜெயலலிதா உயிாிழந்தாா் – மருத்துவமனை விளக்கம்


சசிகலாவின் சகோதரா் திவாகரன் இன்று மன்னாா்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினாா். அப்போது முன்னாள் முதல்வா் ஜெயலலிதா டிச.5ம் தேதி இரவு 11.30 மணியளவில் மரணமடைந்ததாக தொிவிக்கப்பட்டது. ஆனால் அவா் டிச.4ம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பு ஏற்பட்டு உயிாிழந்து விட்டாா் என்று அவா் தொிவித்தாா். மேலும் மருத்துவமனையின் பாதுகாப்பு கருதி மருத்துவமனை நிா்வா்கம் அடுத்த நாளில் அறிவிப்பு வெளியிட்டது என்று தொிவித்தாா்.

இந்நிலையில் அப்போலோ மருத்துவமனை நிா்வாகம் திவாகரனின் கூற்றை மறுத்துள்ளது. ஜெயலலிதா டிச.5ம் தேதி தான் உயிாிழந்தாா் என்றும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் கூறுகையில், ஜெயலலிதாவிற்கு மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

அவரது மரணம் கூட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அறிவிக்கப்பட்டது. மரணம் தொடா்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது துரதிா்ஷ்டவசமானது. இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவா்களின் சேவையை கேள்விக்குறியாக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி