ஆப்நகரம்

Apollo Hospitals: ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை: அமைச்சர்கள் சாப்பிட்டதால் ரூ.1.15 கோடி பில் - அப்போலோ அதிரடி!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வெறும் பழரசம் மட்டுமே அருந்தினார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Mar 2019, 6:00 pm
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வெறும் பழரசம் மட்டுமே அருந்தினார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil jaya 2


மறைந்த முதல்வா் ஜெயலலிதா திடீா் உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பா் 22ம் தேதி இரவு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடா்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையிலும் அவா் அதே ஆண்டு டிசம்பா் 5ம் தேதி இரவு மரணமடைந்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

Also Read This:Jayalalithaa Hospital Bill: சர்வதேச அளவில் இட்லி ஒரு பிளேட் என்ன விலை தெரியுமா?

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான செலவின விவரங்களை கடந்தாண்டு வெளியிட்டது. அதில், அவர் அப்போலோ மருத்துவனையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு மட்டும் பானங்களுக்கான தொகையாக ரூ. 1 கோடியே 15 லட்சம் என பில் தொகையாக காட்டப்பட்டது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கூறுகையில், சிகிச்சையின் போது ஜெயலலிதா வெறும் பழரசம் மட்டுமே அருந்தினார். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள் என்று பலரும் சாப்பிட்டதாலேயே உணவு கட்டணம் ரூ.1.15 கோடி ஆனது என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி