ஆப்நகரம்

ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

TNN 18 Dec 2016, 8:38 pm
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil jayalalithaas death suspicious sasikala pushpa moves sc for cbi probe
ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு


அதிமுக சார்பாக, நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா, பின்னர் திமுக எம்.பி., திருச்சி சிவாவை பொது இடத்தில் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், அவரை அதிமுக.,வில் இருந்து, அக்கட்சியின் முந்தைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜெயலலிதா திடீர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக, பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இதுபற்றி ஏற்கனவே சசிகலா புஷ்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளார். அதில், சசிகலா நடராஜன் அதிமுக பொதுச் செயலாளராக வரக்கூடாது என்றும் கோரியுள்ளார்.

இந்நிலையில், தனது அடுத்தக்கட்ட தாக்குதலாக, தற்போது உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதால், இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளார்.

மேலும், அப்போலோ மருத்துவமனை, தமிழக மற்றும் மத்திய அரசு ஆகியவை சார்பாக, முறையான விளக்கம் அளிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Expelled AIADMK MP Sasikala Pushpa has moved the Supreme Court seeking a CBI probe or a judicial investigation by an apex court judge into the death of J Jayalalithaa.

அடுத்த செய்தி