ஆப்நகரம்

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி; சசிகலாவுக்கு எதிரான கோஷத்தால் பதட்டம்

சென்னையில் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது.

TOI Contributor 17 Jan 2017, 10:06 am
சென்னையில் எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது.
Samayam Tamil jayalalithaas niece deepa garlanded mgs statue tension at marina and annasalai
எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் தீபா அஞ்சலி; சசிகலாவுக்கு எதிரான கோஷத்தால் பதட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்., 100வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் வருவதை முன்னிட்டு அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மெரீனா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மெரீனா சாலையில் பதட்டம் நிலவி வருகிறது. அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கும் தீபா மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால், அண்ணா சாலை மற்றும் மெரீனா சாலைகளில் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு பதட்டம் நிலவி வருகிறது.

அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாக, ''சசிகலா யார்? ஆட்சி நடத்துவதற்கு. பொதுச்செயலாளர் பதவியை விட்டு சசிகலா நீங்க விட வேண்டும். தீபாதான் பதவி ஏற்க வேண்டும்'' என்று கோஷம் எழுப்பியதால் பதட்டம் ஏற்பட்டது.

அடுத்த செய்தி