ஆப்நகரம்

”ஜெயலலிதாவிற்கான மருத்துவச் செலவு 5.5 கோடிகள்”-அப்போலோ டாக்டர்கள் தகவல்..!

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவு 5.5 கோடி என அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 6 Feb 2017, 4:20 pm
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ஆன செலவு 5.5 கோடி என அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil jayalalithas medical expences is 5 5 croresays apollo doctors
”ஜெயலலிதாவிற்கான மருத்துவச் செலவு 5.5 கோடிகள்”-அப்போலோ டாக்டர்கள் தகவல்..!


நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சில மாதங்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர்,கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து,ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது,ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை எனவும் மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்தார் எனவும் அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.மேலும் அவருக்கு அப்போலோவில் சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான செலவு 5.5 கோடி எனவும் அப்போலோ மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இதற்கான பில்லானது ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

திருமணம் ஆகாத மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்றால்,அது அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா மட்டுமே.ஆனால் சிகிச்சை செலவுக்கான பில்லை ஜெயலலிதாவின் குடும்பத்தினரிடம் அளித்தோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்களே தவிர,யாரிடம் அளித்தோம் என குறிப்பிடவில்லை.மருத்துவர்களின் இந்த பதிலும் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது.

Jayalalitha's medical expences is 5.5 crore,says Apollo doctors

அடுத்த செய்தி