ஆப்நகரம்

மார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படும்: தமிழக அரசு

வரும் மார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Dec 2018, 6:07 pm
வரும் மார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil jayalalitha.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பா் 5ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து மெரினா கடற்கரையில், எம்ஜிஆர் நினைவிடத்திற்கு அருகாமையில், ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. தற்போது ரூ.50 கோடி செலவில் அதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு மார்ச் மாதத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கக்கூடாது என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் நினைவிடம் கட்டப்பட்டு திறக்கப்படும் என்று அறிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி