ஆப்நகரம்

நினைவிடத்தை காவல் காக்கும் ஜெ., ஆவி?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி தனது நினைவிடத்தை காவல் காத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாகி வருகிறது.

TNN 27 Dec 2016, 9:42 am
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி தனது நினைவிடத்தை காவல் காத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாகி வருகிறது.
Samayam Tamil jj burial ground protected by jayalalitha soul
நினைவிடத்தை காவல் காக்கும் ஜெ., ஆவி?


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல் எம்ஜியார் நினைவிட வாளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் மர்மானது என அவ்வப்போது இணையத்தில் தகவல்கள் வெளியாகி கொண்டே இருகிறது.

மேலும் ஜெ., உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவருடைய ஆவி போன்ற உருவம் ஒன்று அந்த நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெ.,ம்யின் நினைவிடத்தில் அழுக்குரல் கேட்பதாக மற்றொரு வதந்தியும் பரவலாக பரவியது.

இந்தநிலையில் வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வர்தா புயலின் போது சென்னையே பெரும் பிரச்சனைக்குள்ளான நிலையில் ஜெயலலிதா நினைவிட மேற்கூரைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.ஜெயலலிதாவின் ஆவி தான் தனது நினைவிடத்தை காப்பதாகவும் அதனால் தான் நினைவிடக்கூரைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அந்த வதந்தி தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜெ.,வுக்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டவில்லை என்றும் அதனால் தான் அவரது ஆவி, நினைவிடம், போயஸ் இல்லம் போன்றவற்றில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி