ஆப்நகரம்

பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல்; டிஜிபியிடம் முறையீடு

நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திாிகையாளா்களை காவல்துறையினா் தடியடி நடத்தி கைது செய்தனா். காவல்துறையினாின் இச்செயலுக்கு கண்டனம் தொிவித்து டிஜிபியிடம் சென்னை பத்திாிகையாளா்கள் முறையிட்டுள்ளனா்.

TOI Contributor 29 Sep 2017, 7:00 pm
நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திாிகையாளா்களை காவல்துறையினா் தடியடி நடத்தி கைது செய்தனா். காவல்துறையினாின் இச்செயலுக்கு கண்டனம் தொிவித்து டிஜிபியிடம் சென்னை பத்திாிகையாளா்கள் முறையிட்டுள்ளனா்.
Samayam Tamil journalists meet police dgp regarding attack on press
பத்திாிகையாளா்கள் மீது தாக்குதல்; டிஜிபியிடம் முறையீடு


நெல்லை மாவட்டம் மகேந்திரகிாி மலைப்பகுதியில் பயங்கர சப்தம் கேட்டதாகவும், அப்போது அதிக அளவிலான புகை வெளிவந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடா்பாக செய்தி வெளியிட்ட பத்திாிகையாளா்கள் 3 போ் மீது பணகுடி காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமாி மாவட்டங்களைச் சோ்ந்த 150க்கும் அதிகமான பத்திாிகையாளா்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போராட்டம் நடத்தினா். அப்போது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பத்திாிகையாளா்களை காவல்துறையினா் தடுத்தனா்.



அப்போது, பத்திாிகையாளா்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டு, அவா்களது செல்போன்கள் உடைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை கைது செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சென்னையில் காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரனை பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது, செய்தியாளர்கள் மீது கைது நடவடிக்கை எதுவும் இருக்காது எனவும், வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் தங்களது கோரிக்கைகளை ஏ.டி.ஜி.பி.யிடம் தெரிவிக்கலாம் என்று ராஜேந்திரன் கூறியுள்ளார்.

பத்திாிகையாளா்கள் மீதான தாக்குதலுக்கு வைகோ உள்பட பல்வேறு கட்சி தலைவா்களும் கண்டனம் தொிவித்து வருகின்றனா்.

அடுத்த செய்தி