ஆப்நகரம்

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட மின்சார வாரிய இன்ஜினியர் கைது!

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட மின்சார வாரிய இன்ஜினியர் கைது!

TNN 11 Jan 2017, 1:11 am
திருவண்ணாமலை : இலவசமாக மின்சாரம் தருவதாக விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த ஜூனியர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு புலனாய்வு துறையினர் ஜூனியர் இன்ஜினியர் சீனிவாசனை கைது செய்தனர்.
Samayam Tamil junior engineer held for taking bribe from tn farmer
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட மின்சார வாரிய இன்ஜினியர் கைது!


தென்மத்தூர் கிராமத்தை சேர்ந்த ரவி எனும் விவசாயி தனது தோட்டத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்த இலவச மின்சாரம் தேவை என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் அனுமதி பெற சென்றுள்ளார். ஜூனியர் இன்ஜினியர் சீனிவாசனிடம் அனுமதி கோரியுள்ளார். அந்த குறிப்பிட்ட பணிக்கு மின்சாரம் பெற 125 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆனால் சீனிவாசன் விவசாயி ரவியிடம் 3000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து ரவி 900 ரூபாயை சீனிவாசனிடம் லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால் மீதமுள்ள 2100 ரூபாயையும் கொடுக்கும் படி மின்சார வாரிய அதிகாரி கூறியதை அடுத்து விவசாயி ரவி ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு புலனாய்வு துறையிடம் புகார் கொடுத்தார்.

புகார் உண்மைதானா என்று விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை விவசாயியிடம் கொடுத்து ஜூனியர் இன்ஜினியர் சீனிவாசனிடம் கொடுக்கச்சொல்லியுள்ளனர். பின்னர் சீனிவாசன் லஞ்சத்தை பெறும் போது லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர் ரூபாய் நோட்டுகளில் ஃபினாப்தலீன சோதனை மேற்கொண்டு சீனிவாசன் லஞ்சம் வாங்கியதை உறுதி செய்தனர். இது தொடர்பாக ஜூனியர் இன்ஜினியர் சீனிவாசம் மீது ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி