ஆப்நகரம்

காணும் பொங்கல் கோலாகலம்: கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

காணும் பெங்கலை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் ஆயிரகாணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Samayam Tamil 17 Jan 2020, 5:21 pm
ராமேஸ்வரம்: காணும் பெங்கலை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் ஆயிரகாணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
Samayam Tamil சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள்


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசி நாளான இன்று காணும் பொங்கலை சுற்றுலா தளங்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு உற்றார் உறவினர்களுடன் சென்று பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வட மாநிலங்களிலுருந்தும் ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தங்களது குடும்பத்தாருடன் புனித நீராடி சாமிதரிசனம் செய்தனர். கடலில் நீராடிவிட்டு முதாததையர்களுக்கு பின்டம் வைத்து தர்பனம் செய்தும் வழிபட்டனர். விவசாயம் செய்பவர்கள் தாங்கள் நிலத்தில் உற்பத்தியான தாணியங்களை கோயில் தாணிய உண்டியலில் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரை மணி நேரம் நீட்டிப்பு..! மகுடம் சூட்டப்படும் வீரர் யார்?

மேலும் சபரிமலை சென்று சொந்த ஊர் திரும்புபவர்களும் ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளதாலும் பௌர்ணமியை யொட்டியும் வழக்கத்துக்கு மாறாக கடற்கரை பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் மக்கள் அதிகம் கூட கூடிய சீனியப்ப தர்ஹா, அரியமான், தேவிபட்டிணம், சேதுக்கரை, தனுஸ்கோடி, பாம்பன் பாலம் உள்ளிட்ட 11 முக்கிய இடங்களில் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எருது விடும் விழா: கிருஷ்ணகிரி அருகே ஒருவர் பலி!

இவர்கள் கடலில் ஆபத்தான இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மது அருந்திவிட்டு கடலில் குளிக்க செல்பவர்கள், கடல் அலைகளுடன் செல்பி எடுப்போர் என அனைவரையும் கடலில் இருந்து அப்புறபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை: சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பான ஏற்பாடு!!

தனுஸ்கோடியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி