ஆப்நகரம்

ராணுவத்துல அழிஞ்சத விட, ஆணவத்துல அழிஞ்சவங்கதான் அதிகம்..!! இந்த வீடியோ பாருங்க..

கபடி விளையாட்டின்போது ஓவர் கான்ஃபிடென்டில் தன்னை என்னடா செய்ய முடியும் என்று நினைத்த நபரை அலேக்காக தூக்கி சென்ற சிறுவன்.

Samayam Tamil 31 Oct 2019, 2:27 pm
தமிழகத்தில் கபடி என்பது பாரம்பரியமிக்க வீர விளையாட்டு பட்டியலில் ஒன்றாக இருந்து வருகிறது. எந்த ஒரு விளையாட்டிலும் திறமை ஒன்று இருந்தாலே போதும்.
Samayam Tamil 3


ஆனால், கபடியை பொறுத்தவரையில் நல்ல உடல் தோற்றம் இருக்க வேண்டும் என்பதெல்லாம், ஒரு கட்டுக்கதை மட்டுமே என்பதை இந்த காணொளி உணர்த்தியுள்ளது.



போலீஸ் வாகனத்தின் மீது ஏறி தேவர் குரு பூஜை கொண்டாட்டம்.! அமைதியாகச் சென்ற காவலர்கள்..

நல்ல உயரம் கொண்ட தோற்றத்துடன், எதிரணி எல்லைக்குள் நுழைந்து ரைடு வருகிறார் அந்த நபர். உள்ளே சென்று இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால், நடு குந்தத்தை தாண்டி தனது எல்லைக்குள் செல்லாத அவர், கில்லி படத்தில் வருவதை போன்று, கோட்டிற்கு மெல்லிய இடைவெளியில் நிற்கிறார்.

இன்னும் ஒரு வாரத்துக்கு மழை நின்னு விளையாடுமாம்!

அவர் நிற்கும் தோணி, முடிந்தால் என்னை தொட்டு பாருங்கடா என்பதைபோலதான் உள்ளது. ஏனெனில் எதிரணியில் உள்ள அனைத்து வீரர்களும் மெல்லிய உடல்வாகு கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால், முயற்சித்துதான் பாப்போம் என எதிரணியிலிருந்து உயரம் குறைந்த நபர் வருகிறார்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரின் இடுப்பை இறுக்கி, தனது எல்லைக்குள் இழுத்து வருகிறார். அதன்பின்பு மற்ற வீரர்களும், அந்த கெத்து காட்டிய வீரரை சூழ்ந்து கொண்டு, அவுட் ஆக்கி வெளியே அனுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி