ஆப்நகரம்

தமிழகத்தில் 'டிரிப்ல் சி' ஆட்சிதான் நடக்கிறது.. அது என்ன? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் 'டிரிப்ல் சி' ஆட்சி தான் நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 12 Mar 2023, 1:20 pm
ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட சிலுவைப்பட்டியில் நடந்தது. இதில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார்.
Samayam Tamil dmk


அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியது; ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் 'நீட் தேர்வு ஒழிப்பு' என்று கூறினார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. 23 மாணவர்களை இந்த அரசு காவு வாங்கி உள்ளது. ஸ்டாலின் நீட் தேர்வு ஒழிப்பு என்று கூறிய பொய்யான வாக்குறுதியில் மக்கள் ஏமாந்த காரணத்தினால் 'ஏழரை நாட்டு சனி' பிடித்துள்ளது.

இந்த சனி என்று ஒழிகிறதோ அன்றுதான் தமிழகத்துக்கு விடியல் வரும். அதிமுக என்றும் தொண்டர்களின் இயக்கம்; தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இதனை போல் திமுகவினரால் சொல்ல முடியுமா? கோட்டை கொத்தளத்தை குத்தகைக்கு எடுத்த ஒரே கட்சி திமுக தான்.

'கலைஞர்' அதற்கு பிறகு அவரது மகன் 'ஸ்டாலின்' ஸ்டாலினுக்கு பிறகு 'உதயநிதி' அவருக்கு பிறகு இவரது மகன் இதுதான் திமுகவின் நிலை திமுகவில் இருப்பது அடிமைத்தனம் என்ற அவர் சினிமாத்துறைக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக ரெட் சிக்னல் கொடுத்து விட்டனர்.

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி; மதுரை ஏர்போர்ட் சம்பவத்தில் பெரிய யூ-டர்ன்!

பாலைவனத்தில் கூட தண்ணீர் எடுத்துவிடலாம்; ஆனால் திமுகவினரிடம் மக்கள் நலத்திட்டங்களை எதிர்பாக்க முடியாது. இது தான் நிதர்சனமான உண்மை அரசு ஊழியர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை இந்த ஆட்சியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

''கமிசன், கரப்சன், கலெக்‌ஷன்'' இது தான் இந்த ஆட்சி என்ற அவர் திராவிட மண்ணை, தமிழக மக்களை காக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த விடியா திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் வழங்க வேண்டும் என்றார்.

அடுத்த செய்தி