ஆப்நகரம்

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. ஜாமீனில் வெளிவந்தார் பேராசிரியர் ஹரிபத்மன்.. குமுறும் மாணவிகள்

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் புகார் அளித்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் இன்று ஜாமீனில் வெளிவந்தார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 6 Jun 2023, 4:14 pm
சென்னை: பாரம்பரியமிக்க கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட உதவிப்பேராசிரியர் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Samayam Tamil haripadman


சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ளது கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி. பாரம்பரிய பெருமை மிக்க இந்தக் கல்லூரி மத்தி. கலாச்சார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பலர், தங்களுக்கு பேராசிரியர் ஹரிபத்மன் தொடர்ந்து பாலியல் கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு தேசியக் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவதாகவும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளின் இந்தப் போராட்டம் சட்டசபை வரை எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த சூழலில், திடீரென ஹரிபத்மன் தலைமறைவாகவே, அவரை போலீஸார் தேடி வந்தனர். பின்னர் தனது தோழி வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் ஹரிபத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி