ஆப்நகரம்

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார்

Samayam Tamil 10 Dec 2019, 8:16 pm
சென்னை: விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
Samayam Tamil சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு
சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு


நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் சந்திரயான்2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி அனுப்பப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் உள்ளிட்டவை இருந்தன.

இஸ்ரோ திட்டமிட்டிருந்தபடி, சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து ஆர்பிட்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. ஆனால், நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில் லேண்டர்‌ உடனான தொடர்பு கடந்த செப்ட்டம்பர் மாதம் 7ஆம் தேதி துண்டிக்கப்பட்டது.

கடைசி நேரத்தில் கைவிட்ட விக்ரம்; சரியா குறிவச்ச தமிழன் - டிடிவி தினகரன் பாராட்டு!

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. அதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் உதவி புரிந்து வந்தது. இந்த ஆய்வின் ஒருபகுதியாக, விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தின் புகைப்படத்தை நாசாவின் லுனார் ரிகனைஸ்ஸான்ஸ் ஆர்பிட்டர் மூலம் செப்டம்பர் 26ஆம் தேதி நாசா வெளியிட்டது.

Vikram Lander: விக்ரம் லேண்டர் கிடைச்சிருச்சு!

அதனைக் கொண்டு ஆய்வு செய்த தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் குறித்து நாசாவிற்கு தெரியப்படுத்தினார். அதனடிப்படையில், ஆய்வு செய்த நாசாவும் அதனை உறுதிபடுத்தியுள்ளது.


இந்நிலையில், நாசாவுக்கு உதவிய சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து மக்கல் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில், “சந்திராயன் 2 - விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியனை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கமல் ஹாசன் தெரிவித்தார்” என பதிவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி