ஆப்நகரம்

மருத்துவமனையில் கமல், நேரில் சென்றார் ஸ்டாலின்

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

Samayam Tamil 22 Nov 2019, 3:07 pm
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2016ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்தார். விபத்தால், கமலின் வலது கால் முறிந்தது.
Samayam Tamil kamal-haasan-mk-stalin


கமலின் காலை சரிசெய்ய மருத்துவர்கள் அடிப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்து, டைட்டேனியம் கம்பி ஒன்றை பொருத்தினர். தற்காலிகமாகப் பொருத்தப்பட்ட அந்த கம்பி சில நாட்களில் வெளியே எடுக்கப்படும் என மருத்துவர்கள் அப்போது கூறியிருந்தனர்.

எதிரிகள், துரோகிகளை ஆட்சியமைக்கவிட மாட்டோம்: டிடிவி தினகரன்

இந்நிலையில், இதுகுறித்து நேற்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “கமலுக்கு, 2016யில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றபோது வலது காலில் பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பி, நவ.22 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட உள்ளது. இந்த சிகிச்சையைத் தொடர்ந்து அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார்” எனக் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, கமலுக்குத் தனியார் மருத்துவமனையில் இன்று காலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு காலில் பொருத்தப்பட்டிருந்த டைட்டானிய கம்பி வெளியே எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கமல்ஹாசனை, திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், பேராசிரியர் சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.

எம்பிபிஎஸ் இட ஒதுக்கீடு: மோடியிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்!!

கமல் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரஜினி கமல், கூட்டணி குறித்து அரசியலில் இப்போது சூடு பிடித்திருக்கும் நேரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசனைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி