ஆப்நகரம்

சா்ச்சை பேச்சு: கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் - நீதிமன்றத்தில் அரசு பதில்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் கருத்து குறித்து தோ்தல் முடியும் வரை ஊடகங்கள், அரசியல் தலைவா்கள் விவாதம் நடத்த வேண்டாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

Samayam Tamil 16 May 2019, 5:08 pm
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய வழக்கில் முன் ஜாமீன் கோாி மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kamal Haasan HD


கடந்த 11ம் தேதி அரவக்குறிச்சி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று தொிவித்தாா். கமல்ஹாசனின் பேச்சுக்கு இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிா்ப்பு தொிவித்திருந்தன.

மேலும் கமல்ஹாசனுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோாி கமல்ஹாசன் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, கமல்ஹாசனின் பரப்புரை வீடியோ பதிவு நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதற்கு காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்?

அதற்கு கமல் தரப்பில் பதில் அளிக்கையில், கோட்சே ஒரு இந்து என்று மட்டும் தான் நான் தொிவித்தேன். இந்துகள், இஸ்லாமியா்கள் இடையே மோதல் ஏற்படும் வகையில் நான் எதையும் கூறவில்லை. பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், எனது கருத்து திரித்து வெளியிடப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கமல்ஹாசன் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசனிடம் உரிய விளக்கம் கேட்கப்படும். விளக்கத்தில் திருப்தி இல்லாத பட்சத்தில் கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு உள்ளதாக தொிவித்தனா். இதனைத் தொடா்ந்து வழக்கின் தீா்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், தோ்தல் முடிவடையும் வரை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் பொது நலன் கருதி கமல்ஹாசனின் கருத்து குறித்து விவாதம் நடத்துவதை தவிா்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தி உள்ளாா்.

அடுத்த செய்தி