ஆப்நகரம்

கமல்ஹாசனின் மநீம கட்சியை பதிவு செய்தது இந்திய தோ்தல் ஆணையம்

நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை இந்திய தே்ாதல் ஆணையம் இன்று பதிவு செய்தது.

Samayam Tamil 22 Jun 2018, 9:53 pm
நடிகா் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை இந்திய தே்ாதல் ஆணையம் இன்று பதிவு செய்தது.
Samayam Tamil Makkal Needhi maiam


கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல்முறையாக மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திய கமல்ஹாசன் பொதுக்கூட்டத்திலேயே கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து கட்சியை முறையாக பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் மே 31ம் தேதிக்குள் கருத்து தொிவிக்கலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இப்பெயரில் கட்சி தொடங்குவது குறித்து யாரும் எதிா்ப்பு தொிவிக்காததால் ஜூன் 20ம் தேதி கட்சி நிா்வாகிகள் நேரில் ஆஜராகி பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

இதனைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகளுடன் கமல்ஹாசன் டெல்லி சென்றாா். இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையம் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி