ஆப்நகரம்

கேரள முதல்வருடன் கமல் சந்திப்பு

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கேரள முதல்வரை கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

Samayam Tamil 3 Mar 2018, 8:17 pm
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கேரள முதல்வரை கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.
Samayam Tamil kamal hassan meets kerala cm in chennai
கேரள முதல்வருடன் கமல் சந்திப்பு


சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை அவர் தேனாம்பேட்டையிலுள்ள அப்பல்லோவின் சிறப்பு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொற்றுநோய் பாதிப்பு தொடர்பாக பரிசோதனைகள் நடத்தப்பட்டன.



சிகிச்சைக்குப்பின் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பினராயி விஜயன் ஓய்வெடுத்து வருகிறார். அவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.

அடுத்த செய்தி