ஆப்நகரம்

கொடைக்கானலில் கஜா புயல் பாதித்த பகுதியில் கமல்

கொடைக்கானலில் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார். மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

Samayam Tamil 17 Dec 2018, 4:17 pm
அண்மையில் தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. கொடைக்கானலில் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கின. கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil index


இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொடைக்கானலில் சுற்றுப்பயணம் செய்து புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார்.
கீழ்மலை, மலையக்காடு, கோரங்கொம்பு, குரங்கனிப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற அவர் மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின் அவர்களது குறைகளைக் கேட்டறித்தார்.
புயலால் விழுந்த பெரிய மரங்களை கற்ற அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரிடம் பலர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி