ஆப்நகரம்

கபினி அணை திறப்பு: குமாரசாமிக்கு கமல் நன்றி

கபினியில் தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Jun 2018, 7:46 pm
கபினியில் தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kamal d


கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தற்போது பிரச்னை சுமூகமாக வந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையின் மொத்த கொள்ளளவு 84 அடி. நேற்று முன்தினம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு 17,500 கனஅடி. நேற்று 23,487 கனஅடியாக அதிரித்தது. இன்று காலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து காவிரி உபரி நீரின் அளவு 22,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆன்மீக தரிசனத்திற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி மதுரை வந்தார். பின்னர், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

‘இறைவனின் அருளால் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் இம்முறை தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது. நல்ல மழை பெய்து வருவதால், தொடர்ந்து தண்ணீர் விடப்படும். ஏற்கனவே தமிழகத்தக்கு நேற்று இரவு 20,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழையால் அணை நிரம்ப நிரம்ப இன்னும் கூடுதலா தண்ணீர் திறக்கப்படும்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், கபினியில் நீர் திறந்து விட்டதற்காக குமாரசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு நன்றி தெரிவித்ததாகவும், இனி இருமாநிலங்களுக்கிடையே அடைக்கப்பட்டிருந்த பல கதவுகள் திறக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்,

அடுத்த செய்தி