ஆப்நகரம்

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவை துவக்கம்

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.

Samayam Tamil 14 Dec 2018, 5:08 pm
காஞ்சிபுரம் மாவட்டம் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்தாண்டுக்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவங்கி வைத்தார்.
Samayam Tamil Sugar Factory


செங்கல்பட்டு அடுத்த, படாளம் பகுதியில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த ஆலையில் ஜனவரி துவக்கத்தில் கரும்பு அரவை ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ஆறு மாத காலம் வரையில் ஆலை இயங்கும். அடுத்த ஆறு மாத காலத்திற்கு இயந்திரங்கள் பழுது மற்றும் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பணி, டிசம்பர் மாதமே துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமை தாங்கி, கரும்புகளை அரவை இயந்திரத்தில் போட்டு, அரவையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆலையின் இணை பதிவாளர் லட்சுமி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் அப்பாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த ஆண்டு 1.15 லட்சம் டன் கரும்புகள் அரவை செய்தோம். இந்தாண்டு கரும்புகள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஆலை துவக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு 2 லட்சம் டன் கரும்புகள் வரையில் அரைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த ஆலையின் உறுப்பினர் களாக உள்ளவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஏற்றி வரும் கரும்புகளையும் அரைத்து தர முடிவு செய்துள்ளோம். கரும்பு வெட்டுவதற்கான முன்பணம் வழங்கப்பட்டுவிட்டது. கரும்பு விவசாயிகள் கொண்டு வரும் கரும்பு எடைக்கேற்ப கரும்புக்கான முன்பணம் வழங்கப்பட்டு உள்ளது,'' என்று ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி