ஆப்நகரம்

விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்: கனிமொழி பதிலடி!

விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் ஏன் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனுக்கு, திமுக எம்.பி கனிமொழி பதலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2019, 1:50 pm
விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் ஏன் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனுக்கு, திமுக எம்.பி கனிமொழி பதலடி கொடுத்துள்ளார்.
Samayam Tamil விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்: கனிமொழி பதிலடி!
விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்: கனிமொழி பதிலடி!


தூத்துக்குடி மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைத்திட வலியுறுத்தி, திமுக சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று விவிடி சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி பேசுகையில், தேர்தல் முடிந்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்கு முன்பே நம்மை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது எடப்பாடி அரசு. நீட் தேர்வு, இந்தி தினிப்பு என பல்வேறு துன்பங்களுக்கு மக்களை ஆளாக்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரயில்வே அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தமிழில் பேசக்கூடாது என்று தெற்கு ரயில்வே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மத்தியில் உள்ளவர்களுக்கு காவடி எடுக்கும் அரசாக எடப்பாடி பழனிச்சாமி அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பாதியை அவர்கள் தனயாருக்கு விற்றுவிட்டார்கள். 8 வழிச்சாலை வேண்டாம் என்று மக்கள் கூறிய பின்னரும், அதனை நிறைவேற்றுவேன் என்கிறார் முதல்வர்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. தீயணைப்பு நிலையத்தில் உள்ள தண்ணீரைக்கூட பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளால், உள்ளாட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி அரசு அஞ்சுகிறது.

முதலில் உள்ளாட்சித் தேர்தல் வருமா? சட்டமன்ற தேர்தல் வருமா? என்பது தெரியவில்லை. சட்டமன்ற தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெற்றதும், உடனடியாக உள்ளாட்சித் தேர்டதல் நடத்தப்படும். மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

தூத்துக்குடி மாநகரில் சொத்து வரியை 2 மடங்கு உயர்த்தியுள்ளார்கள். பழைய வீட்டிற்கும், புதிய வீட்டிற்கும் ஒரே அளவான தீர்வை விதித்துள்ளார்கள். மாநகராட்சி சொத்து வரி உயர்வை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி; அரசு அதிகாரிகள் இன்று சொத்து வரியை அடிப்படை வசதிகள் எதையுமே செய்து கொடுக்காமல், பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் அடித்தட்டு மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மேலும் திமுக சார்பாக வழக்கு தொடரவும் இருக்கிறோம்.

சொத்தை வித்தாவது திமுக விவசாயிகள் கடனை அடைக்க வேண்டும் என்று பொன்ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, விவசாயிகள் கடனை அடைக்கமுடியாமல் ஏன் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்தார்.

அடுத்த செய்தி