ஆப்நகரம்

மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்.!

ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி, சென்னையில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

TNN 16 Dec 2017, 10:27 am
ஓகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி, சென்னையில் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Samayam Tamil kanniyakumari fisherman protest in chennai today
மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்.!


அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையே தலைகீழாக புரட்டி போட்டது. ஆயிரக்கணக்கான மீனவர்களில் புயலில் சிக்கி தப்பி வந்த மீனவர்கள் அண்டைய மாநிலங்களில் அடைக்கலம் தேடி சென்றனர். பலர் தாங்களாக கரை திரும்பினர். இந்நிலையில் எஞ்சியுள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி முழுவதும் அங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.

குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக, சென்னை மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி வழங்காத காரணத்தினால், மீனவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மீனவர்கள் இன்று சேப்பாக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தர கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி