ஆப்நகரம்

மூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 8:01 am
தென்மேற்கு பருவமழை ஓய்ந்து வடகிழக்கு பருவ மழை தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. நேற்று பல இடங்களில் கனமழை பெய்ததால் மக்கள் வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். விடுமுறை தினம் என்பதால் பெரியளவில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Samayam Tamil Untitled collage (4)


திங்கள் கிழமையான (அக்டோபர் 21) இன்றும் மழை விடாமல் பெய்துவருவதால் காலையிலேயே மாணவர்களும், பெற்றோர்களும் விடுமுறை அறிவிப்பு செய்திகளை பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

Chennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே!

இந்நிலையில் கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி கன்னியாகுமாரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.

காலை முதல் வெளுத்துக் கட்டும் மழை; குளிர்ந்த சென்னை மாநகர்!

மேலும் கோவை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

குமரிக்கடல், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்லு தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது குறுப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி