ஆப்நகரம்

ஓகி புயலைப் போல இன்னொரு புயலா? என்ன சொல்கிறார் வெதர்மேன்!

ஓகி புயலைப் போன்று மற்றொரு புயல் கன்னியாகுமரியை தாக்கும் என்று சொல்லப்படும் வதந்திகளை கன்னியாகுமரி மக்கள் நம்ப வேண்டாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

TNN 7 Dec 2017, 11:21 pm
ஓகி புயலைப் போன்று மற்றொரு புயல் கன்னியாகுமரியை தாக்கும் என்று சொல்லப்படும் வதந்திகளை கன்னியாகுமரி மக்கள் நம்ப வேண்டாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kanyakumari wont get affected by another cyclone says tamilnadu weatherman pradeep john
ஓகி புயலைப் போல இன்னொரு புயலா? என்ன சொல்கிறார் வெதர்மேன்!


இது பற்றி தெரிவித்த அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”ஓகி புயல் தாக்கிய கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தின் உள்மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டமிருந்தால், மதுரையில் கூட பெய்யலாம்.

ஓகி புயலால் தாக்கப்பட்ட கேரளாவின் தென்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தாழ்வுமண்டலமாக மாறி ஒடிசா கடற்கரைக்கு நகர்ந்துள்ளது. அந்த காற்று தென் மாநிலங்களுக்கு சாதகமாக இருப்பதால், மழை கிடைக்கும்.

கன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது, அதை கன்னியாகுமரி மக்கள் நம்ப வேண்டாம். அங்கு மிதமான மழை பெய்யக்கூடும். அச்சப்படத் தேவையில்லை” என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி