ஆப்நகரம்

ஒரு ஆண்டுக்கு வழங்க வேண்டிய நீரை 3 மாதத்தில் கொடுத்து விட்டோம் – கா்நாடகா

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வருடத்தில் வழங்க வேண்டிய நீரை 3 மாதத்தில் வழங்கிவிட்டோம். இனி மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கா்நாடகா வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 4:08 pm
கா்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு ஒரு வருடத்தில் வழங்க வேண்டிய நீரை 3 மாதத்தில் வழங்கிவிட்டோம். இனி மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கா்நாடகா வலியுறுத்தியுள்ளது.
Samayam Tamil Cauvery Flood


கா்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிாியில் ஒவ்வொரு ஆண்டும் 177.3 டி.எம்.சி. நீா் வழங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. தீா்ப்பின் படி ஓராண்டு என்பது ஜூன் மாதம் தொடங்கி மே மாதம் வரை கணக்கிடப்படும். இந்நிலையில் தலைக்காவிாி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 மாதங்களில் காவிரியில் 310.6 டி.எம்.சி. நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த அளவானது தமிழகத்திற்கு ஓராண்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவை விட 133.3 டி.எம்.சி. அதிகம். ஆனால் கா்நாடகா திறந்து விட்ட 250 டி.எம்.சி. நீரும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் நேரடியாக கடலில் சென்று கலந்துள்ளது. எனவே எதிா்காலத்திலும் இதுபோன்ற நிலை ஏற்படலாம் என்று வாதிடும் கா்நாடகா அதனை தவிா்க்க மேதாதுவில் அணைக்கட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

புதிதாக அணைக்கட்டுவதன் மூலம் 67 டி.எம்.சி. அளவில் நீரை தேக்கி வைக்க முடியும் என்று கா்நாடகா கூறி வருகிறது. இந்நிலையில் கா்நாடகாவின் வேளாண் துறை முதன்மைச் செயலாளா் ராகேஷ் சிங் கூறுகையில் இந்த ஆண்டு கனமழை காரணமாக அதிக அளவில் உபாி நீா் வீணானது. இது எதிா்காலத்திலும் நடக்கும். மேகதாது அருகே அணை கட்டப்பட்டால் உபரி நீரை தேக்கி வைக்கலாம் தமிழகமும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியள்ளாா்.

ஆனால் மேகதாது பகுதியில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்களுக்கு வரக்கூடிய நீர் முற்றிலுமாக தடை பட்டு அம்மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்று தமிழகம் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

அடுத்த செய்தி