ஆப்நகரம்

கர்நாடகாவை போல் பிற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் – தமிழிசை

கர்நாடகாவைப் போன்று பிற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Jul 2019, 11:12 am
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், கர்நாடகாவை போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Tamilisai Soundararajan 1


கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நீண்ட கலேபரங்களுக்குப் பின்னர் நேற்று குமாரசாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில், ஆட்சிக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், ஆட்சிக்கு எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், குமாரசாமி தலைமையிலான அமைச்சர்கள் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “கர்நாடகாவைப் போன்று பிற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும். கர்நாடகாவில் தாமரை மலர்வது, மற்ற மாநிலங்களிலும் தாமலை மலர்வதற்கு உதவி செய்யும்.

தமிழை நாங்கள் தான் காப்பாற்றுகிறோம் என ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுவது தமிழ் தாய்க்கே பொறுக்காது. தமிழை காப்பாற்ற ஸ்டாலின் உள்பட யாரும் தேவை இல்லை. தமிழ் எப்போதும் உயிர்ப்புடனும், வளமுடனும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி