ஆப்நகரம்

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் பக்தர்களின் கரகோஷத்துடன் ஏற்றப்பட்டது

கார்த்திகை திருநாளை முன்னிட்டு இன்று மாலை, பக்தர்களின் கரகோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

TNN 2 Dec 2017, 6:40 pm
கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது இந்த திருத்தலம் தான்.
Samayam Tamil karthigai maha deepam was placed in thiruvannamalai
திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபம் பக்தர்களின் கரகோஷத்துடன் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது.

இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசம் பெற்றனர்.

இதையடுத்து, இன்று மாலை 6 மணிக்கு 2500க்கும் அதிகமான மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தீபம் ஏற்றும் போது, பக்தர்கள் அனைவரும் அரோகரா அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கரகோஷம் போட்டது, விண்ணில் எதிரொலியாக பிரதிபலித்தது.

அடுத்த செய்தி