ஆப்நகரம்

கீழடியில் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிப்பு: கார்த்தி சிதம்பரம் சாடல்

'கீழடி'யில் அருங்காட்சியம் அமைக்கும் நிகழ்ச்சிக்கு தனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Samayam Tamil 20 Jul 2020, 4:09 pm
கீழடியில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 5 கட்ட அகழாய்வுப் பணி நடந்து முடிந்தது. இந்த ஆராய்ச்சிகளில் தொன்மையான நாகரிகத்தைத் தமிழர்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்தது. நாகரிகத்தின் உச்சம் எனச் சொல்லப்படும் 3 விதமான கட்டுமான வழிகளையும் 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகம் கொண்டிருந்தது எனத் தரவுகள் உறுதி செய்துள்ளது.
Samayam Tamil கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்


அதேபோல் வர்த்தகம் உள்ளிட்டவையும் நடந்ததற்கான சான்றுகளும் கீழடியில் கிடைத்தது. குறிப்பாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களில் எழுத்துக்கள் காணப்பட்டது. தற்போது, 6ஆவது கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இப்பகுதியில் நடந்து முடிந்த அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், செங்கல் சுவர் உள்ளிட்டவைகளை உலகறிய செய்யும் வகையில் அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, ரூ.12.25 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் நிறுவப்படவுள்ளது. புதிய அருங்காட்சியகத்திற்கு காணொலிக்காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இனி உலகம் அறியும் தமிழரின் வரலாற்றை, கீழடி மியூசியம்!


இந்த நிலையில், “கீழடியில் அருங்காட்சியம் அமைப்பதற்கு முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல்நாட்டியது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், இந்நிகழ்வுக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு எவ்விதமான அழைப்போ, தகவலோ தெரிவிக்கவில்லை. இது மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிப்பது போலவே அமைந்துள்ளது” என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார்.

அடுத்த செய்தி