ஆப்நகரம்

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்: கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

TNN 10 Sep 2016, 3:31 pm
சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil karunanidhi stalin greets thangavelu and varun bhati
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்: கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற வருண் சிங் பாட்டி ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பாராட்டு.#MariappanThangavelu pic.twitter.com/TWCCYm59XS — KalaignarKarunanidhi (@kalaignar89) September 10, 2016
அதேபோல் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாரியப்பன் மற்றும் வருண் ஆகியோர் எங்களை பெருமையடைய செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Congratulations #MariyappanThangavelu & Varun Bhati u made us proud! Govt. should enhance support for specially-abled athletes #Paralympics — M.K.Stalin (@mkstalin) September 10, 2016
மேலும், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி