ஆப்நகரம்

தமிழகக் காவல்துறையை மீட்டெடுப்பாரா ஜெயலலிதா - கருணாநிதி கேள்வி

தமிழகக் காவல்துறையைக் கையிலே வைத்திருக்கும் ஜெயலலிதா, பிரச்சினைகளிலிருந்து காவல் துறையினரை மீட்டு, அவர்களைப் பாதுகாத்திட முன் வருவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 29 Jul 2016, 4:12 am
சென்னை: தமிழகக் காவல்துறையைக் கையிலே வைத்திருக்கும் ஜெயலலிதா, பிரச்சினைகளிலிருந்து காவல் துறையினரை மீட்டு, அவர்களைப் பாதுகாத்திட முன் வருவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil karunanidhi statement about problems facing tamilnadu police dept
தமிழகக் காவல்துறையை மீட்டெடுப்பாரா ஜெயலலிதா - கருணாநிதி கேள்வி


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கூடத்தினர் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிய வருகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலே 25 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதாவது, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட் டங்களில் 25 சதவிகிதம், தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுள்ளன.

மிகக் குறைவான சம்பளம், குடும்பத்தாரின் தேவைகள் - குழந்தைகளின் கல்வி - நாளும் அதிகரித்து வரும் விலைவாசி போன்றவற்றினால் ஏற்படும் நெருக்கடி - மன அழுத்தம், மேலதிகாரிகள் நடத்தும் முறையால் உண்டாகும் தன்மானச் சிதைவு ஆகியவற்றால் தமிழகக் காவல் துறையினர் குறிப்பாக அடுத்தடுத்துச் சாதாரண நிலையில், காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர் வரை பணியாற்றுவோர், ஒவ்வொரு நாளும் கடக்க வேண்டிய பிரச்சினைகளும், அனுபவித்துத் தீர வேண்டிய அவலங்களும் எண்ணிலடங்காதவை.

பாதிக்கப்படும் பொது மக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரிகள், இன்னலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்திற்குள் சிக்கித் தவித்திடும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்றிட அனுமதித்திட வேண்டும்.

அடுத்த செய்தி